Search This Blog

Monday, September 27, 2010

சிங்கை கோவில்கள் - ஒரு நிமிஷம்

சிங்கையில் ஒரு நல்ல விஷயம் இங்கிருக்கும் கோவில்கள் மற்றும் அதற்க்கு கிடைக்கும் ஆதரவு (அரசு மற்றும் ஆன்மீக நண்பர்களிடமிருந்து). இங்கு ஏறக்குறைய 20 கோவில்கள் உள்ளன. இவை எல்லாம் Hindu Endowments Board  ஆல் கண்காணிக்கபடுகிறது. 

இங்குள்ள கோவில்களில் சில மட்டுமே, உண்மையான ஆன்மீக சூழ்நிலைக்கும், கோவில்களின் தேவையை பூர்த்தி செய்ய தகுதி உடையதாக உள்ளதாக எண்ணுகிறேன். காரணம் சில கோவில்களில் ஏற்பட்ட அனுபவங்களே.

ஒரு கோவிலில் (முருகன் ஆலயம்), உள்ள ஒலி ஒளி அமைப்பு எனக்கு சென்னை சென்ட்ரல் ஸ்டேஷன் ஐ நினைவு படுத்தியது, இப்படி "டிங் டாங் பக்த கோடிகளுக்கு ஒரு அறிவிப்பு நாளை நடக்கவிருக்கும் சனி பெயர்ச்சி பூஜையில் கலந்துகொள்ள விரும்பும் பக்தர்கள் $51 செலுத்தி சனிபகவானின் அருள் பெறுமாறு வேண்டிகொள்ளுகிறோம் டிங் டாங்". கோவிலில் வந்து அமைதியாக பிரார்த்தனை செய்யலாம் என்று வருகின்றவர்கள் நிலைமை கொஞ்சம் மோசம்தான். மேலும் திருவிழா நாட்களில் சாதாரண அர்ச்சனை இருக்காது. கொஞ்சம் அதிகம் பணம் செலுத்தி premium அர்ச்சனைதான்  செய்ய முடியும், அன்று வருகின்ற குறைந்த வருவாய் உள்ளவர்கள் அர்ச்சனை  செய்வது கஷ்டம் தான்,, அர்ச்சனை என்பது நமக்கு திருப்தி தருவதற்கு தானே, அதற்கும் ஆப்பு வைத்தால் எப்படி!!!!

இந்த முருகன் ஆலயத்தில் இப்படி என்றால், இன்னொரு முருகன் ஆலயத்தில் ஒலி பெருக்கியில் இப்படி ஒரு அறிவிப்பு " Singapore narcotic bearo   நடத்தும்  போதை மருந்து  விழிப்புணர்வு முகாம்  இப்போது function ஹால்-ல்  நடந்து கொண்டு இருக்கிறது, பக்த கோடிகள் கலந்துகொண்டு பயன்பெறுமாறு அழைக்கிறோம்". இந்த மாதிரி  முகாம்கள் கோவிலில் நடத்துவதில் அர்த்தம் இல்லை, மேலும்  அதை இவ்வாறு ஒலி பெருக்கியில் கூவுவதும் அநாகரிகமாகும்.

இதவிட கொடுமை சில அர்ச்சகர்கள் செய்வது, (இது நடந்தது ஒரு பெருமாள் கோவிலில்). இந்த கோவிலில் அர்ச்சகர் அர்ச்சனை செய்துகொண்டு இருந்தார், அப்போது (அர்ச்சகருக்கு தெரிந்த) ஒருவர் அங்கு வர, அவரை பார்த்து  " சார் வாங்க, நலமா என்றார்". அர்ச்சைனைக்கு கொடுத்தவர் இது என்ன புது மந்திரம் என திரு திரு என விழிக்க, பிறகு புரிந்துகொண்டார். அர்ச்சகருக்கு வேண்டுமானால் இது தொழிலாக இருக்கலாம் ஆனால் நம்மை மாதிரி ஆட்களுக்கு இது பிரார்த்தனை தானே!!. கோவிலில் இருக்கும் போது ஒருவருக்கு ஒருவர் வணக்கம் கூட சொல்லகூடாது என்பது நமது இந்து மதத்தின் அடிப்படை, ஏனென்றால் கோவிலில் கடவுளை தவிர யாரும் பெரிதில்லை என்பதுதானே.

அர்ச்சகர்கள்  பூஜை செய்வதையும் அர்ச்சனை செய்வதையும் ஒரு வேலையாக கருதாமல் சேவையாக செய்யமுடியுமானால் நன்றாக தான்  இருக்கும்.
சிங்கையில் உள்ள மக்கள் ஆதரவிற்கு இங்கிருக்கும் கோவில்களில் பணம் ஒரு பிரச்சனையாக இருக்காது என நினைக்கிறேன். எல்லா கோவில்களும் அப்படியில்லை. நான் சென்ற கோவில்களில்  ஒரு சில கோவில்கள் இன்னமும் நன்றாக உள்ளது.
1 .ஸ்ரீ கிருஷ்ணன் ஆலயம்,  வாட்டர்லூ ஸ்ட்ரீட்
2 . ஸ்ரீ சிவாதுர்கா ஆலயம், potong pasir
3 . ஸ்ரீ தண்டாயுதபாணி ஆலயம், Tank road

கோவில்களில் நம்மவர்கள் அடிக்கும் கூத்தை பற்றி இன்னொரு பதிவில்,,,

Thursday, September 23, 2010

பயணிகள் கவனத்திற்கு - சென்னை விமான நிலையம்

கண் விழித்தபோது, விமானம் சீராக கிழே இறங்கிகொண்டு  இருந்தது,  லேசாக காது வலி. கொஞ்சம் பதற்றம். எத்தனைமுறை பயணம் செய்தாலும், பயணத்தின் போது ஏற்படும் இந்த பதற்றம் தவிர்ககமுடியாது என்று நினைக்கிறன். விமானத்தை விட்டு வெளியே வந்தஉடன் நம்ம ஆட்கள் தமாஸ் பண்ண அரம்பச்சுரூவாங்க.முதலில் குடியேற்ற நுழைவு அதிகாரிகள் -  எல்லோரையும் தீவிரவாதிகளை போல் பார்க்கும் பார்வை அப்புறம்  சில கேள்விகள். எல்லா ஊர்லையும் குடியேற்ற நுழைவு அதிகாரிகள் முறைச்சு பார்க்க தனியா training கொடுக்கிறாங்க போல,, 

அதுக்கப்புறம் நம்ம பெட்டிய போய் தேடனும், இதுக்கு நமக்கு கொஞ்சம் chennai airport  பற்றி பொது அறிவு கொஞ்சம் தேவைப்படும். கொஞ்சம் தாமதமாக போய் தேடினால் உங்கள் பெட்டி பெல்ட் ல் இருக்காது. belt -ன் முடிவில் உங்கள் பெட்டி இருக்கலாம். பெட்டி நல்லபடியா  கிடைச்சுதுன்ன {!} , பெட்டில எதாவது chalk ல குறி எதாவது இருக்கா என்று பாக்கணும். கடத்தல கண்டுபிடிக்க ரகசிய குறியாம், அப்பாடியோவ் என்ன technology !! 

அதுக்கப்புறம் நம்ம கஸ்டம்ஸ், அதாங்க சுங்க நுழைவு சோதனை, நிஜமாவே அது நமக்கு சோதனை தாங்க! நம்ம ஊர்ல சில அரசு துறைகளில் உள்ளவர்கள் பார்வை மட்டும் ஏங்க அவ்வளவு தெனாவட்டு. சென்னை ஓரளவுக்கு பரவாயில்லை மத்த விமான நிலையத்தை ஒப்பிடும்போது. இந்த இடத்தில ஒரு செய்தி இப்பெல்லாம் அதிகமா தாங்க நகை வைத்திருந்தால் சுங்க வரி கட்ட வேண்டுமாம். ஒரு ஆண் 10000 ரூபாய்க்கும், ஒரு பெண் 20000 ரூபாய்க்கு மட்டுமே அனுமதியாம். 20000 ரூபாய்க்கு தாலி கூட வாங்க முடியாது என்று நம்ம அரசுக்கு தெரியாதா?

நம்ம ஊர்ல லஞ்சம் இந்த அளவுக்கு இருப்பதற்கு, இதை  போல   நடைமுறைக்கு  ஒவ்வாத விதிகளை காரணம் என்பது எல்லோருக்கும் தெரிகிறது. அனால் யாருங்க மணி கட்டறது!!.

இன்னொரு முக்கியமான செய்தி, கச கஷா (Poppy seeds ) வை விமானதில்  கொண்டுபோன (அப்பாவி) மக்கள் கொஞ்சம் பேர் இப்போது அரபு நாட்டு சிறையில் வாடுகிறார்கள். கச கஷா (Poppy seeds ) க்கும் சிறைக்கும் என்ன தொடர்பு என தெரியதவர்கள் இங்கே சொடுக்கவும் Poppy seeds  . இந்த விஷயத்தை  உங்களுக்கு தெரிஞ்சவங்க யாராவது வெளிநாடு போனார்கள் என்றால் அவர்கள் காதில் போட்டுவைக்கவும்.

ஒருவழியா சுங்கநுழைவு அதிகாரிகளை சாமாளித்து வெளியே நடந்து வந்துகொண்டு இருந்தோம், ஒருவர் எல்லோரையும் பாதையின் ஓரத்திற்கு போகும்படி தள்ளினார். என்னடா இது சோதனை ரோட்ல நடக்ககூட முடியலையே என்று பார்த்தல், ஒரு மதிய அமைச்சர் தன் பரிவாரங்கள் சூழ வந்துகொண்டு இருந்தார். நம்ம அமைச்சர்கள் ஜைன துறவிங்க போல, அவர்கள் வரும் வழியில் இருக்கும் நம்மளை, பூச்சி, புழு எல்லாவற்றையும் தள்ளிவிட்டு நடக்கிறார்கள், என்ன பரிவு சார்! அவங்களை போய் குறை சொல்லிட்டு,,,

எப்படியோ ஊர் வந்தாச்சு, பார்ப்போம்  அடுத்த பயணம் என்ன அனுபவத்தை கொடுக்கிறது என்று.

Saturday, September 18, 2010

விசும்பு- ஜெயமோகனின் அறிவியல் புனை கதை தொகுப்பு - ஒரு பார்வை

கடந்த சில நாட்கள் முன்பு ஜெயமோகன் சுஜாதா பற்றி தன்னுடைய வெப்சைட்ல் எழுதிஇருந்தர். சிலர் சரியாக தப்பாக புரிந்துகொண்டு, ஜெயமோகன் - இக்கு ஏன் இந்த வேலை என்று கோவம் கொண்டனர். இந்த நேரத்தில் எனக்கு ஜெயமோகனின் விசும்பு எனும் அறிவியல் புனை கதை தொகுப்பு கிடைத்தது இந்த புத்தகத்தை சுஜாதாவிற்கு சமர்ப்பணம் செய்திருந்தார் (அறிவியலின் கதைகளின் முன்னோடி என குறிப்பிட்டு) , சரி கதைக்கு வருவோம்..
எல்லா கதைகளும் ஒரே மாதிரியான கதை ஓட்டம். திடுக்கிடும் முடிவு. சில கதைகள் இந்திராசௌந்திரராஜன் கதை படிப்பது போல இருந்தது. ஆனால் இயற்கை, ஆன்மீகம் பற்றி எழுதும்போது ஜெயமோகன் அவர்களின் வீச்சுஐ நன்றாக உணரமுடிந்தது. இயற்கை, ஆன்மீகம் பற்றி அவருடைய புரிதல் தான் பலருக்கும் பிடித்த ஒன்று. இந்த புத்தகம் Singapore  National Library இல் கிடைக்கிறது,, படிச்சுபாருங்க தோழர்களே தோழிகளே, நன்றி

Sunday, September 12, 2010

முதல் பதிவு - Rab Ne Bana Di Jodi (A Match made by God)

நல்ல திரைகதை...ஒரு நல்ல படத்துக்குரிய ஆரம்பம், பிறகு கொஞ்சம் செயற்கையான சந்திப்புகள். பாதி படதிற்குமேல் கொஞ்சம் பயமாகிவிட்டது- கதையின் கற்பு கெடாமல் முடிக்கவேண்டுமே என்று. கடைசியில்  ஒரு நல்ல எதிர்பார்த்த முடிவு. படத்தில் புரட்சி ஏதும் இல்லை. ஆனால் மனசை கவர்தவன் உடன் வாழ்வதா, மனசை காப்பாற்றுவன் உடன்  வாழ்வதா என்கின்ற சராசரி பெண்ணின் உணர்வுகளை நன்றாக  Aunska ஷர்ம செய்திருந்தார்.  Sharukhan நன்றாகவே செய்திருந்தார். பின்னணி இசை நன்று. இதை தமிழில் சூர்யா அல்லது மாதவன் செய்யலாம், என்ன நினைகிறிங்க பின்னுட்டம் இடவும்