Search This Blog

Thursday, September 23, 2010

பயணிகள் கவனத்திற்கு - சென்னை விமான நிலையம்

கண் விழித்தபோது, விமானம் சீராக கிழே இறங்கிகொண்டு  இருந்தது,  லேசாக காது வலி. கொஞ்சம் பதற்றம். எத்தனைமுறை பயணம் செய்தாலும், பயணத்தின் போது ஏற்படும் இந்த பதற்றம் தவிர்ககமுடியாது என்று நினைக்கிறன். விமானத்தை விட்டு வெளியே வந்தஉடன் நம்ம ஆட்கள் தமாஸ் பண்ண அரம்பச்சுரூவாங்க.முதலில் குடியேற்ற நுழைவு அதிகாரிகள் -  எல்லோரையும் தீவிரவாதிகளை போல் பார்க்கும் பார்வை அப்புறம்  சில கேள்விகள். எல்லா ஊர்லையும் குடியேற்ற நுழைவு அதிகாரிகள் முறைச்சு பார்க்க தனியா training கொடுக்கிறாங்க போல,, 

அதுக்கப்புறம் நம்ம பெட்டிய போய் தேடனும், இதுக்கு நமக்கு கொஞ்சம் chennai airport  பற்றி பொது அறிவு கொஞ்சம் தேவைப்படும். கொஞ்சம் தாமதமாக போய் தேடினால் உங்கள் பெட்டி பெல்ட் ல் இருக்காது. belt -ன் முடிவில் உங்கள் பெட்டி இருக்கலாம். பெட்டி நல்லபடியா  கிடைச்சுதுன்ன {!} , பெட்டில எதாவது chalk ல குறி எதாவது இருக்கா என்று பாக்கணும். கடத்தல கண்டுபிடிக்க ரகசிய குறியாம், அப்பாடியோவ் என்ன technology !! 

அதுக்கப்புறம் நம்ம கஸ்டம்ஸ், அதாங்க சுங்க நுழைவு சோதனை, நிஜமாவே அது நமக்கு சோதனை தாங்க! நம்ம ஊர்ல சில அரசு துறைகளில் உள்ளவர்கள் பார்வை மட்டும் ஏங்க அவ்வளவு தெனாவட்டு. சென்னை ஓரளவுக்கு பரவாயில்லை மத்த விமான நிலையத்தை ஒப்பிடும்போது. இந்த இடத்தில ஒரு செய்தி இப்பெல்லாம் அதிகமா தாங்க நகை வைத்திருந்தால் சுங்க வரி கட்ட வேண்டுமாம். ஒரு ஆண் 10000 ரூபாய்க்கும், ஒரு பெண் 20000 ரூபாய்க்கு மட்டுமே அனுமதியாம். 20000 ரூபாய்க்கு தாலி கூட வாங்க முடியாது என்று நம்ம அரசுக்கு தெரியாதா?

நம்ம ஊர்ல லஞ்சம் இந்த அளவுக்கு இருப்பதற்கு, இதை  போல   நடைமுறைக்கு  ஒவ்வாத விதிகளை காரணம் என்பது எல்லோருக்கும் தெரிகிறது. அனால் யாருங்க மணி கட்டறது!!.

இன்னொரு முக்கியமான செய்தி, கச கஷா (Poppy seeds ) வை விமானதில்  கொண்டுபோன (அப்பாவி) மக்கள் கொஞ்சம் பேர் இப்போது அரபு நாட்டு சிறையில் வாடுகிறார்கள். கச கஷா (Poppy seeds ) க்கும் சிறைக்கும் என்ன தொடர்பு என தெரியதவர்கள் இங்கே சொடுக்கவும் Poppy seeds  . இந்த விஷயத்தை  உங்களுக்கு தெரிஞ்சவங்க யாராவது வெளிநாடு போனார்கள் என்றால் அவர்கள் காதில் போட்டுவைக்கவும்.

ஒருவழியா சுங்கநுழைவு அதிகாரிகளை சாமாளித்து வெளியே நடந்து வந்துகொண்டு இருந்தோம், ஒருவர் எல்லோரையும் பாதையின் ஓரத்திற்கு போகும்படி தள்ளினார். என்னடா இது சோதனை ரோட்ல நடக்ககூட முடியலையே என்று பார்த்தல், ஒரு மதிய அமைச்சர் தன் பரிவாரங்கள் சூழ வந்துகொண்டு இருந்தார். நம்ம அமைச்சர்கள் ஜைன துறவிங்க போல, அவர்கள் வரும் வழியில் இருக்கும் நம்மளை, பூச்சி, புழு எல்லாவற்றையும் தள்ளிவிட்டு நடக்கிறார்கள், என்ன பரிவு சார்! அவங்களை போய் குறை சொல்லிட்டு,,,

எப்படியோ ஊர் வந்தாச்சு, பார்ப்போம்  அடுத்த பயணம் என்ன அனுபவத்தை கொடுக்கிறது என்று.

3 comments:

மதுரை சரவணன் said...

நல்ல அனுபவப்பதிவு. கசகசா எச்சரிக்கை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று. வாழ்த்துக்கள்

Veli said...

நன்றி திரு.மதுரை சரவணன் அவர்களே!!

துளசி கோபால் said...

ஆமாங்க நம்ம பெட்டிகளில் ரெண்டில் M ன்னு சாக்கால் எழுதி வச்சுருந்தாங்க. அப்புறம் நம்மை ஓரங்கட்டிப் பொட்டியைத் திறந்து காமிக்கச் சொன்னாங்க.

உள்ளே சாமி சிலைகளை வச்சுருந்தோம்.

Post a Comment