Search This Blog

Wednesday, October 13, 2010

Karthik calling Karthik (Hindi) - உலக தரமான படம்


ரொம்ப நாளைக்கப்புறம் ஒரு நல்ல psychological thriller  படம், schizophrenia நோயால் பாதிக்கப்பட்ட ஒருவனுடைய (கார்த்திக்) வாழ்கையில்  நடக்கும்  விசயம்தான்   படம். கார்த்திக்  தான் சிறுவயதில்  ஏற்ப்பட்ட தன் அண்ணனின் சாவிற்கு தான்தான் காரணம் என்று நினைக்கிறான். அதனால் நிகழ்காலத்தில் தன்னபிக்கையற்ற, ஒவ்வொரு நாளும் நடைமுறை வாழ்கையில் உள்ள பிரச்சினைகளை சமாளிக்க முடியாமல் தற்கொலைக்கு முயற்சி செய்யும்போது அவனுக்கு ஒரு போன் கால் வருகிறது. போனில் பேசுவது கார்த்திக்! அப்படியே அவன் குரல்! முதலில் நம்ப மறுக்கிறான், தொலைபேசி அலுவலகத்தில் விசாரிக்கிறான், மேலும் அதிர்ச்சி அவன் சொன்ன நேரத்தில் எந்த அழைப்பும் அவன் தொலைபேசிக்கு வரவில்லை!

மறுநாள் அதே நேரத்திற்கு  மீண்டும் போன், அதில் பேசும் (கார்த்திக்) குரல் , தான் சொல்வது போல நடந்தால் அவன் பிரச்சனைகளை தீர்க்க முடியும் என்கிறது. மேலும் கார்த்திக் ரொம்ப நாளாக ஒரு தலையாக விரும்பும் சோனாலி-ஐ காதலிக்க வழியும் சொல்கிறது. அவனும் அந்த குரல் சொல்வது போல நடந்து கொள்ள அவனுடைய பிரச்சனைகள் சரியாகிறது. சோனாலி-ம் காதலிக்க தொடங்குகிறாள்.
அந்த தொலைபேசி குரல் சொல்லும் ஒரே நிபந்தனை, அவன் இந்த தொலைபேசி குரல் ரகசியத்தை யாரிடமும் சொல்ல கூடாது என்பது தான்.

அனால் ஒரு அன்யோன்யமான சமயத்தில் சோனாலி-இடம் அந்த குரல் ரகசியத்தை சொல்ல, அவள் நம்ப மறுக்க- படம் சூடு பிடிக்கிறது. கார்த்திக் அந்த தொலைபேசி குரலின் நிபந்தனை மீறியதால், அந்த குரல் கார்த்திக்-ஐ மீண்டும் அந்த பழைய நிலைமைக்கே மாற்றிவிடுகிறது. வேலை பறிபோகிறது, சோனாலி ஐ பிரிகிறான்.
இந்த கண்ணாமூச்சி  ஆட்டம் புரியாமல், கார்த்திக் தலைமறைவு ஆகிறான்..
அவன் மீண்டும் சோனாலி-யுடன் சேர்ந்தானா, குரலின் ரகசியம் என்ன என்பதை வெண் திரை-ஐ அல்லது சின்ன திரை-யில் காண்பது உங்கள் சாய்ஸ்,,

படம், thirller படத்துக்குரிய அத்தனை அம்சங்களும் சரிவிகிதத்தில் இருந்தன. பின்னணி இசை, ஒளிப்பதிவு மிக துல்லியம். கார்த்திக்( Farhan_Akhtar ) சோனாலி (Deepika Padukone ) நடிப்பும் நன்று,,

ஒரு நல்ல thirller பார்க்க விரும்பினால் இந்த படம் ஒரு நல்ல சாய்ஸ்,,

1 comment:

தமிழினியன் said...

நல்ல படம்தாங்க இது அதுலயும் பரான் அக்தர் அந்த தொலைபேசி அழைப்புக்கு முன்பு, தொ.பே.அ பின்பு என இரு வேடங்களிலும் வித்தியாசம் காட்டி நடித்திருப்பது அருமை. வசணங்களும் அதைப் போலவே அருமையாக இருக்கும்.

word verification எடுத்துடுங்க,

Post a Comment