Search This Blog

Tuesday, October 5, 2010

ஆசை ஆசையா - வசந்தம் சேனலின் வசந்தம்


குழந்தைகளின் படிப்பை காரணம் காட்டி நம்ம ஊர் சேனல்களை பார்ப்பதை நிறுத்தியபின் உள்ளூர் சேனல் மட்டுமே கதி!. அரைத்த மாவை அரைக்கும் சன்-க்கும், 4 நல்ல நிகழ்சிகளை வைத்துகொண்டு ஜல்லியடிக்கும் (நன்றி சுஜாதா sir)  விஜய்-க்கும் முழுக்கு!!!  அந்த நேரத்தில்தான் சிங்கையில் தமிழ்-க்காக ஒரு தனி சேனல்-ஐ தொடங்கினார்கள். ஆரம்பத்தில் கொஞ்சம் தடுமாறினாலும், இப்போதேல்லாம் ஒரு சில நிகழ்ச்சிகள் பார்க்கும்படிய இருக்குங்க!!

அதுல ஒன்று தான் இந்த "ஆசை ஆசையா"- Cooking for Love . இந்த கான்செப்ட் என்னை பொருத்தவரை புதுசா பட்டது. நிகழ்ச்சிய பார்க்க முடியாதவர்களுக்கு ஒரு முன்னோட்டம் -  சில சமயம் நீங்க யாரையாவது அசத்த விரும்பினால், அதற்க்கு ஒரு வழி அவர்களுக்கு ஒரு நல்ல விருந்து கொடுப்பது. அந்த விருந்தே நீங்கள் சமைத்ததாக இருந்தால் நன்றாக இருக்கும் அல்லவா! அனால் நமக்கு சமைக்க தெரியாவிட்டால், அதற்குத்தான் இந்த நிகழ்ச்சி. நீங்கள் இந்த நிகழ்ச்சி அமைப்பாளர்-க்கு மின்அஞ்சல் செய்ய வேண்டும். நம் அழைப்பு ஏற்க்கபட்டால்,  அவர்களே நம்ம வீட்டுக்கு வந்து சமைத்து கொடுப்பார்கள்.

பிறகு என்ன நாம் அசத்த விரும்பும் நபர்க்கு, அவருக்கு தெரியாமல் நம்ம வீட்டிலயே சமைத்து அவருக்கு ஒரு இன்ப அதிர்ச்சி கொடுக்க வேண்டியதுதான். அனால் இந்த நிகழ்ச்சி இதுவரைக்கும் மிக மிக உணர்ச்சிகரமா போயிட்டு இருக்கு.

இந்த நிகழ்ச்சியை பார்க்கும் போது தான் தெரிக்கின்றது, ஒரே வீட்டில் வசிக்கும் அப்பா-மகள், அக்கா-தம்பி, கணவன்-மனைவி  போன்ற  நெருங்கிய  உறவில் கூட  மனம் விட்டு பேச நேரம் அல்லது மனம்  கிடைக்காத சூழ்நிலையில் உள்ளோம் என்று.

நாடகத்தில் உள்ள போலி செண்டிமெண்டை பார்த்து அழ விரும்புவர்களுக்கு, இது ஒரு நிஜ கதை,, விஜய் டிவியில் வரும் ரியாலிட்டி show போல இல்லாமல் பட பிடிப்பு இயற்கையாக உள்ளது,,
இந்த வாரம் கான்சர்-ல் வருந்தும் ஒரு அம்மாவிற்கு, மகள் கொடுக்கு விருந்து. எப்போது வேண்டுமானாலும் மரணம் வரலாம் என்று உள்ள ஒரு அம்மாவின் நிலைமை பார்க்க மிக வருத்தமாக தான் இருந்தது.
இந்த நிகழ்ச்சியில் பாராட்டவேண்டியவர்கள் இருவர். ஜனனி- நிகழ்ச்சி படைப்பாளர், இனொருவர் படபிடிப்பாளர் (கேமரா man ) 





No comments:

Post a Comment