Search This Blog

Monday, September 27, 2010

சிங்கை கோவில்கள் - ஒரு நிமிஷம்

சிங்கையில் ஒரு நல்ல விஷயம் இங்கிருக்கும் கோவில்கள் மற்றும் அதற்க்கு கிடைக்கும் ஆதரவு (அரசு மற்றும் ஆன்மீக நண்பர்களிடமிருந்து). இங்கு ஏறக்குறைய 20 கோவில்கள் உள்ளன. இவை எல்லாம் Hindu Endowments Board  ஆல் கண்காணிக்கபடுகிறது. 

இங்குள்ள கோவில்களில் சில மட்டுமே, உண்மையான ஆன்மீக சூழ்நிலைக்கும், கோவில்களின் தேவையை பூர்த்தி செய்ய தகுதி உடையதாக உள்ளதாக எண்ணுகிறேன். காரணம் சில கோவில்களில் ஏற்பட்ட அனுபவங்களே.

ஒரு கோவிலில் (முருகன் ஆலயம்), உள்ள ஒலி ஒளி அமைப்பு எனக்கு சென்னை சென்ட்ரல் ஸ்டேஷன் ஐ நினைவு படுத்தியது, இப்படி "டிங் டாங் பக்த கோடிகளுக்கு ஒரு அறிவிப்பு நாளை நடக்கவிருக்கும் சனி பெயர்ச்சி பூஜையில் கலந்துகொள்ள விரும்பும் பக்தர்கள் $51 செலுத்தி சனிபகவானின் அருள் பெறுமாறு வேண்டிகொள்ளுகிறோம் டிங் டாங்". கோவிலில் வந்து அமைதியாக பிரார்த்தனை செய்யலாம் என்று வருகின்றவர்கள் நிலைமை கொஞ்சம் மோசம்தான். மேலும் திருவிழா நாட்களில் சாதாரண அர்ச்சனை இருக்காது. கொஞ்சம் அதிகம் பணம் செலுத்தி premium அர்ச்சனைதான்  செய்ய முடியும், அன்று வருகின்ற குறைந்த வருவாய் உள்ளவர்கள் அர்ச்சனை  செய்வது கஷ்டம் தான்,, அர்ச்சனை என்பது நமக்கு திருப்தி தருவதற்கு தானே, அதற்கும் ஆப்பு வைத்தால் எப்படி!!!!

இந்த முருகன் ஆலயத்தில் இப்படி என்றால், இன்னொரு முருகன் ஆலயத்தில் ஒலி பெருக்கியில் இப்படி ஒரு அறிவிப்பு " Singapore narcotic bearo   நடத்தும்  போதை மருந்து  விழிப்புணர்வு முகாம்  இப்போது function ஹால்-ல்  நடந்து கொண்டு இருக்கிறது, பக்த கோடிகள் கலந்துகொண்டு பயன்பெறுமாறு அழைக்கிறோம்". இந்த மாதிரி  முகாம்கள் கோவிலில் நடத்துவதில் அர்த்தம் இல்லை, மேலும்  அதை இவ்வாறு ஒலி பெருக்கியில் கூவுவதும் அநாகரிகமாகும்.

இதவிட கொடுமை சில அர்ச்சகர்கள் செய்வது, (இது நடந்தது ஒரு பெருமாள் கோவிலில்). இந்த கோவிலில் அர்ச்சகர் அர்ச்சனை செய்துகொண்டு இருந்தார், அப்போது (அர்ச்சகருக்கு தெரிந்த) ஒருவர் அங்கு வர, அவரை பார்த்து  " சார் வாங்க, நலமா என்றார்". அர்ச்சைனைக்கு கொடுத்தவர் இது என்ன புது மந்திரம் என திரு திரு என விழிக்க, பிறகு புரிந்துகொண்டார். அர்ச்சகருக்கு வேண்டுமானால் இது தொழிலாக இருக்கலாம் ஆனால் நம்மை மாதிரி ஆட்களுக்கு இது பிரார்த்தனை தானே!!. கோவிலில் இருக்கும் போது ஒருவருக்கு ஒருவர் வணக்கம் கூட சொல்லகூடாது என்பது நமது இந்து மதத்தின் அடிப்படை, ஏனென்றால் கோவிலில் கடவுளை தவிர யாரும் பெரிதில்லை என்பதுதானே.

அர்ச்சகர்கள்  பூஜை செய்வதையும் அர்ச்சனை செய்வதையும் ஒரு வேலையாக கருதாமல் சேவையாக செய்யமுடியுமானால் நன்றாக தான்  இருக்கும்.
சிங்கையில் உள்ள மக்கள் ஆதரவிற்கு இங்கிருக்கும் கோவில்களில் பணம் ஒரு பிரச்சனையாக இருக்காது என நினைக்கிறேன். எல்லா கோவில்களும் அப்படியில்லை. நான் சென்ற கோவில்களில்  ஒரு சில கோவில்கள் இன்னமும் நன்றாக உள்ளது.
1 .ஸ்ரீ கிருஷ்ணன் ஆலயம்,  வாட்டர்லூ ஸ்ட்ரீட்
2 . ஸ்ரீ சிவாதுர்கா ஆலயம், potong pasir
3 . ஸ்ரீ தண்டாயுதபாணி ஆலயம், Tank road

கோவில்களில் நம்மவர்கள் அடிக்கும் கூத்தை பற்றி இன்னொரு பதிவில்,,,

2 comments:

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

சிங்கையென்றில்லை எங்குமோ நம் கோவில்கள் என்பது வெறுப்பை எற்படுத்தும் இடமாகவே அமைவதுடன்; அச்சொல்லின் மகிமைக்கு அப்பார்ப்பட்டதாகவே அமைந்தது மிகத் துன்பம்.வர வர கோவில்கள் 5 ஸ்ரார் ஒட்டல் போல் வசதி படைத்தோர் கூத்தடிக்கும் கூடமாகிவிட்டது.
அர்ச்சகர்கள் பணமொன்றையே மனதிற் கொண்டு அவர்கள் கூத்துக்கு ஜல்ரா போடுவோராகி வெகுநாளாகிவிட்டது.
காசேதான் கடவுள்- இது கடவுளுக்கும் தெரிந்ததால் - அவரும் பேசாமலே இருக்கிறார்.
நாம் புலம்பி எதுவுமாகாது.
கோவிலைத் தேடி நான் போகாமல் குமரா உனை நான் கும்பிட வேண்டுமெனும் மனநிலையை
வேண்டுவோம்.

செல்வா said...

இப்படியெல்லாம் நடக்குதா ..?
சத்தம் இல்லாத அமைதியான கோவில்கள் இருந்தால் நன்றாகத்தான் இருக்கும்..

Post a Comment